சென்னை: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை கிடைத்த தகவலின் படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த தொற்று நோய் மூலம் மட்டும் இதுவரை 5,31799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை நேற்றைய நிலவரப்படி 17 பேர் பலியாகி' உள்ளனர். இன்றைய நிலவரப்படி, 724 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதுவரை இந்த தொற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம் வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு தேவையானவற்றை உறுதி செய்யும் பட்சத்தில்,  நிதி உதவி திட்டங்களையும் அறிவித்து வருகிறது. 


மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலர் நன்கொடை மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றனர். சிலர் அந்தந்த மாநில அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கும் மற்றும் பலர் பிரதமர் நிவாரண நிதிக்கும் நிதி அளித்துள்ளனர். 


அதாவது குறிப்பாகத் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் அளித்த நன்கொடை தான் இன்றைய தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இதுவரைபிரதமருக்கு அளித்த நிவாரண நிதியில் அதிக நன்கொடையை பாகுபலி ஹீரோ பிரபாஸ் வழங்கியுள்ளார். அவர் பிரதமர் நிவாரண நிதி 3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்கியுள்ளார். மொத்தம் நான்கு கோடியை மக்கள் சேவைக்காக அளித்துள்ளார்.


அதேபோல தெலுங்கு திரைப்படத் துறையை சேர்ந்த மற்ற நடிகர்களும்  நடிகர் பவன் கல்யாண்  ரூ.2 கோடி, மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளனர்.