திருப்பதி கோவிலில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நேர்மறையான வழக்குகளுக்கு மத்தியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை மூடுவதற்கு ஆந்திர மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், டி.டி.டி அதிகாரிகள் இந்த செய்தியைக் கண்டித்து, கோயிலை மூடுவதற்கு இதுபோன்ற எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று TTD தெரிவித்துள்ளது. 


கொரோனா பரவலை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கையொட்டி கடந்த 21 ஆம் தேதி முதல் திருப்பதியில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஜூன் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்து வெளிக்கம் அளித்துள்ளது. அதில்., 


இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழுவினர் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு தரிசனம் குறித்து வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.