கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு, சனிக்கிழமையன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் ஒரே சகோதரி கங்கோத்ரி தேவி(வயது-73) நேற்று மரணமடைந்தார். 


அவருடைய இறப்பை உறுதிப்படுத்திய லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, 'அவருடைய தம்பி விடுதலையாக வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்துவந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று முழுவதும் பிரார்த்தனையில் இருந்துவந்தார். 


ஆனால், மூன்றரை ஆண்டுகாலம் தண்டனை அறிவிக்கப்பட்டநிலையில், அதிர்ச்சியில் மரணமடைந்தார்' என்று தெரிவித்துள்ளார். சகோதரி இறப்புக்கு, லாலு பிரசாத் ஜாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.