Viral Video: உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நெடுஞ்சாலையில் வேகமாக பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் ஜோடியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ, அங்குள்ளவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதிக்கு அருகிலுள்ள NH9 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் அதிருப்தி


அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை ஒரு பெண் இறுக்கமாக அணைத்துக்கொண்டது செல்வது தெரிகிறது. பின் இருக்கையில் அமர்வதற்கு பதிலாக, அந்த பெண் வட்டி ஓட்டுபவரின் மடியில் அமர்ந்திருப்பதை வீடியோவாக எடுத்த அந்த நபர், சாலை விதியை மீறிச்செல்லும் அவர்கள் மீதான ஆதங்கத்தை பகிரங்கமாக அதில் வெளிப்படுத்துகிறார். வீடியோவில் பேசும் அந்த நபர், தற்போது மக்கள் ஆபத்தான ஸ்டண்ட்களை வைரலாக்க எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்றும் கூறினார்.


முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


அந்த நபர் உத்தரபிரதேச முதலமைச்சரிடம் இந்த விஷயத்தை அறிந்து தேவையான நடவடிக்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். சாலை பாதுகாப்பு விதிமுறைகளிலும் தம்பதியினர் சமரசம் செய்து கொண்டு ஹெல்மெட் அணியவில்லை என்றும் வீடியோ மூலம் தெரிகிறது.



மேலும் படிக்க | காற்றில் பறந்த பெண்... பார்த்து அதிர்ந்த நெட்டிசன்ஸ்: திகில் வைரல் வீடியோ


ட்விட்டரில் குவிந்த புகார்கள்


ட்விட்டரில் உள்ள பிற பயனர்கள் உத்தர பிரதேச காவல்துறை மற்றும் காசியாபாத் போக்குவரத்து காவல் துறையைக் குறியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். "இது உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் நடந்துள்ளது. இங்கே விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முக்கியமில்லை. பைக் ஓட்டுபவரின் மடியில் அந்த பெண் எப்படி அமர்ந்திருக்கிறார் என்று பாருங்கள். டூர் டிராவல் ஆபரேட்டர் சுதன்ஷு வீடியோவைப் பதிவு செய்துள்ளார்" என்று ஒரு ட்விட்டர் பயனர் ட்வீட் செய்துள்ளார். 


கமிஷ்னர் பதில்


காசியாபாத் காவல்துறை துணை ஆணையர் வீடியோ மீதான விசாரணை குறித்து பேசினார். அவர் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக, வீடியோவை ஆய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க இந்திராபுரம் காவல் ஆய்வாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.


காவல்துறை அபராதம்


இந்த ஜோடிக்கு காசியாபாத் போக்குவரத்து போலீசார் மிகப்பெரிய அபராதம் விதித்தனர். "ட்விட்டரில் இருந்து பெறப்பட்ட புகாரை அறிந்து, அவர்களுக்கு அபராதம் நடவடிக்கை விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த வீடியோவில் உள்ள ஜோடியை பலரும் பொறுப்பற்ற மற்றும் ஆபாசமான நடத்தைக்காக விமர்சித்தனர். ராஜஸ்தானின் அஜ்மீரிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த பைக்கில் ஏறிய தம்பதிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிடும் வீடியோவும் வைரலானது. 


மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ