குஜராத் குல்பர்க் சொசைட்டி வழக்கில் இன்று தீர்ப்பு:-
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது ''குல்பர்க் சொசைட்டி'' பகுதிக்குள் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் 9 பேர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர்.