கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும்  பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


ஸ்புட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் இன்று முதல் போடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மக்களுக்கு மேலும் நிம்மதி அளிக்கும் ஒரு செய்தியாக, கர்நாடகாவில் நிறுவப்படும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் உற்பத்தி ஆலை விரைவில் தந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று அம்மாநில துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில்,  மாநிலத்தில் தடுப்பூசி தயாரிக்க முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


 இந்த திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சிவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என அவர்  கூறினார்.


ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதற்கும்,  மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாநிலத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள் என 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இருக்க வேண்டும் என்றார்.

கர்நாடகாவை பொறுத்தவரை, மாநிலத்தில் 1.10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்றார்.


மூன்று கோடி தடுப்பூசிகளை  ஆர்டர் செய்துள்ள மாநில அரசு, உற்பத்தியாளர்களுக்கு அதற்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளது. ஆனால் இதுவரை ஏழு லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளன என மாநில துணை முதல்வர் மேலும் தெரிவித்தார்.


ALSO READ | Sputnik V தடுப்பூசியின் விலை குறித்து Dr Reddy's வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR