புது தில்லி: அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளைத் தவிர, அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூடுமாறு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது. கோவிட்-19 தொற்றின் உச்சம் இன்னும் சில நாட்களில் தலைநகரைத் தாக்கும் என்று டெல்லி அரசு நம்புவதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வந்த தனியார் அலுவலகங்கள், வீட்டில் இருந்தே வேலை செய்யும் (Work From Home) நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், உணவகங்கள் ஹோம் டெலிவரி செய்யவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்து. நகரில் உள்ள அரசு அலுவலகங்களும் தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படுகின்றன.


DDMA இன்று அளித்துள்ள உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 


- டெல்லியில் (Delhi) அனைத்து தனியார் அலுவலகங்களும் மூடப்படும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்.


- விலக்கு பெற்ற தனியார் அலுவலகங்கள் மட்டுமே திறந்திருக்க முடியும். 


- டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு டிடிஎம்ஏவின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


- டெல்லியில் பார்கள் மற்றும் உணவகங்களை மூட உத்தரவு. எனினும், உணவை டெலிவரி செய்யவும், உணவகத்திலிருந்து உணவை எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு. 


ALSO READ | முக்கிய செய்தி: Covid-19 பரிசோதனை குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டது ICMR


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "கோவிட் உச்சம் ஏற்கனவே கிட்டத்தட்ட வந்து விட்டது, அல்லது ஓரிரு நாட்களில் கண்டிப்பாக வந்துவிடும். எப்படியும் இந்த வாரம் கண்டிப்பாக தொற்று உச்சத்தைக் காண்போம். அதன் பிறகு, எண்ணிக்கை குறையத் தொடங்கும். எனினும், மக்கள் எச்சரிக்கை நிலையை கைவிடாமல் இருக்க, மற்றொரு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம்." என்று கூறினார். 


இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,68,063 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த கோவிட்-19 (COVID-19) தொற்று எண்ணிக்கை எண்ணிக்கை 3,58,75,790 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 4,461 பேரின் எண்ணிக்கையும் அடங்கும். 


சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,21,446 ஆக உயர்ந்துள்ளது. இது 208 நாட்களில் அதிகபட்சமான எண்ணிக்கையாகும். 277 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்தது என காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவு தெரிவிக்கிறது. ஓமிக்ரானால் (Omicron) பாதிக்கப்பட்ட 4,461 பேரில், 1,711 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 


ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR