Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்

ஓமிக்ரான், டெல்டா அல்லது இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 02:00 PM IST
  • ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
  • மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
  • ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர், பழச்சாறு என பலவித திரவங்களை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும் title=

Omicron Food: நாட்டில் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பல வித பிரச்சனைகளுடன் பசியின்மையும் உள்ளது.  

இந்த சூழ்நிலையில், மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஓமிக்ரான், டெல்டா அல்லது இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. 

ஓமிக்ரான் (Omicron) தொற்றால் பாதிக்கப்பட்டால், தொண்டையில் கடுமையான வலி மற்றும் தொண்டையில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. எதை குடித்தாலும், தொண்டையில் வலி இருக்கும். இந்த நிலையில், எந்தெந்த உணவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தொண்டையில் வலி இருந்தாலும், இந்த உணவுகளால் உங்களுக்கு பிரச்சனை இருக்காது. 

தயிர்

தொண்டை வலி மற்றும் பசியின்மை காரணமாக எதையும் சாப்பிட விருப்பம் இருக்காது. நீங்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால், தயிர் சாப்பிடுவது உங்களுக்கு நல்லதாக அமையும். இதில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதை விழுங்குவதிலும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. வாழைப்பழத்தையும் தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். மென்மையான புரோபயாடிக்ஸ் உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

சூப்

தொண்டை புண்ணுக்கு நிவாரணம் அளிக்கவும், ஊட்டமளிக்கவும் சூப் குடிக்கலாம். காய்கறிகளை சூப்பில் சேர்த்து சாப்பிடவும். இதனால் பலன் கிடைக்கும்.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை காய்கறிகளை மற்றும் கீரை வகைகளை உட்கொள்வதும் உங்களுக்கு நன்மை பயக்கும். பசலைக்கீரை, முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை மசித்து சாப்பிடவும். இது தவிர வெந்தயக் கீரையும் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.

ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!

புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

ஓமிக்ரான் நோயாளிகள் லேசான உணவை சாப்பிடுவது முக்கியம். அடிக்கடி புரோட்டீன் ஷேக்கை எடுத்துக் கொள்ளலாம். தொண்டை வலி இருந்தால், பால் (Milk) அல்லது தண்ணீரில் புரதப் பொடியைக் கலந்தும் குடிக்கலாம்.

எலக்ட்ரோலைட்டுகளை குடிக்கவும்

ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர், பழச்சாறு என பலவித திரவங்களை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டால், எலக்ட்ரோலைட்டுகள் உள்ள பானத்தை குடிக்கவும். எலக்ட்ரோலைட்கள் அடங்கிய பானத்தை குடிப்பதன் மூலம், உடலில் சோடியத்தின் அளவும் சரியாக இருக்கும். எலெக்ட்ரல் பவுடரை எலக்ட்ரோலைட் பானம் வடிவில் உட்கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டாம்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஆனால் சிட்ரஸ் பழங்களில் (Citrus Fruits) சிறிது புளிப்புத்தன்மை உள்ளது. இதனால் இவற்றை விழுங்குவது கடினமாகிறது. ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை வலி இருந்தால், சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது தொண்டை பிரச்சனையை மோசமாக்கும். ஆகையால் இதில் கவனம் தேவை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News