சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4,454 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
Coronavirus updates: கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4,454 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,454 புதிய இறப்புகள் பதிவானதை அடுத்து இந்தியாவின் கோவிட் -19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று (மே 24, 2021) தெரிவித்துள்ளது.3,02,544 பேர் குணமாகியுள்ளனர்.
நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 2,67,52,447 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இப்போது 27,20,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
ALSIO READ | COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.5 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் அதன் கோவிட் -19 தடுப்பூசி கோவாக்சின் குழந்தைகளுக்கு செலுத்திமேற்கொள்ளும் பரிசோதனைகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | கர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR