தெலுங்கானா: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் தொடர்கிறது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், லாக்-டவுனில்  சிக்கியுள்ள தொழிலாளர்களுக்காக இந்தியன் ரயில்வே முதல் சிறப்பு ரயிலை இயக்கியுள்ளது என்பது மிகப்பெரிய செய்தியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரடங்கில் சிக்கி 1200 தொழிலாளர்களுடன் தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்ட் செல்லும் முதல் சிறப்பு ரயில் இன்று புறப்பட்டது. ஊரடங்கு காலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணத்திற்குக் குறைவானதல்ல. இருப்பினும், இதுபோன்ற இன்னும் எத்தனை ரயில்கள் அடுத்ததாக இயக்கப்படும் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


தெலுங்கானாவிலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலின் 24 பெட்டிகளில் சுமார் 1200 புலம்பெயர்ந்தோர் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் தெரிவித்தார். மேலும் ரயில்கள் இயக்கப்படுமா என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். ஜார்க்கண்டின் ஹதியாவுக்குச் செல்லும் தெலுங்கானாவின் லிங்கரப்பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 4:50 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது என்று அவர் கூறினார்.


 



 



உண்மையில், ஊரடங்கில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் சிறப்பு ரயில்களை இயக்கக் கோரியுள்ளன. 


அதே நேரத்தில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு வசதியாக இந்திய அரசு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நோயாளிகள் போன்றவர்கள் அவர்களின் சொந்த கிராமத்திற்கு செல்வதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.