COVID-19 in India: 2.60 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 09 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. 18.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,77,150 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ | LOCKDOWN NEWS: மகாராஷ்டிராவின் மற்றொரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 86.62 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 12.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 17) ஒரே நாளில் 15,66,394 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நிலவர படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 13 லட்சத்து 16 ஆயிரத்து 012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 23 ஆயிரத்து 911 பேர் பலியாகினர். 11 கோடியே 99 லட்சத்து 23 ஆயிரத்து 164 பேர் மீண்டனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் ஆபத்தான உயர்வைச் சமாளிக்க ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் வாரணாசியில் கோவிட் -19 (Covid 19) மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR