புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,846 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றில் திடீரென ஏற்பட்டுள்ள எழுச்சி, நாட்டில் சிகிச்சையில் இருப்போரது எண்ணிக்கையை 3 லட்சத்துக்கும் மேல் கொண்டு சென்றுள்ளது. சனிக்கிழமையன்று 22,956 பேர் கோவிட் -19-லிருந்து மீண்டனர், 197 பேர் இறந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,15,99,130 ​​பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,09,087 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 1.1 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 1.59 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். தற்போதுள்ள தொற்று எண்ணிக்கைகள் 112 நாட்களில் அதிகபட்சமான எண்ணிக்கையாகும். 


மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும், COVID-19 ஆல் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இங்கு தொற்றுநோயின் இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அங்கு மிக அதிகப்படியாக ஒரே நாளில் 25,681 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாபில் 2,470 பேரும், கேரளாவில் 1,984 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


ALSO READ: Coronavirus: தடுப்பூசி மீது புகார்! இந்த தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதிப்பு!


மறுபுறம், மொத்தம் 4,46,03,841 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி (Covid Vaccine) போடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, அண்மையில் தொற்று அதிகரித்ததற்கு முக்கிய காரணம், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக மக்கள் கருதுவதும், COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும்தான் காரணம் என தெரிவித்தார். 


"தொற்றின் இந்த திடீர் அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் முக்கிய காரணம், மக்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதும், கொரோனா வைரஸ் முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவதும்தான். மக்கள் இன்னும் சில காலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்," என்று குலேரியா கூறினார்.
நிதி ஆயோக் உறுப்பினர் (உடல்நலம்) வி.கே.பால் கூறுகையில், தொற்றின் சங்கிலி துண்டிக்கப்பட வேண்டும். அதற்கு தடுப்பூசி ஒரு கருவி என்றால், தொற்றைக் கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பு உத்தியை அதிகப்படுத்துவதும் மற்ற கருவிகளாகும் என்றார்.


"COVID-19 வழிமுறைகளை மீறுவதும், மெத்தனமாக இருப்பதும் தொற்றின் எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம்" என்று அவர் கூறினார்.


ALSO READ: Coronavirus update: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாபில் அதிகரிக்கிறது கொரோனா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR