ஒரே நாளில் 72,330 பேர் பாதிப்பு: கொரோனாவின் இரண்டாம் அலையால் பீதியில் மக்கள்
கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் மிக அதிக ஒரே நாள் தொற்று என்ணிக்கையாகும்.
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் மிக அதிக ஒரே நாள் தொற்று என்ணிக்கையாகும். இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தரவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 11, 2020 க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான அதிகப்படியான தொற்று எண்ணிக்கை இதுதான். மேலும், இறப்பு எண்ணிக்கை 1,62,927 ஆக அதிகரித்துள்ளது, இதில் 459 தினசரி புதிய இறப்புகள் உள்ளன. இது 116 நாட்களில் மிக அதிகமான எண்ணிக்கையாக உள்ளது என்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக 22 வது நாளாக ஒரு நிலையான அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4.78 சதவீதம் அதாவது 5,84,055 ஆக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மீட்பு விகிதம் 93.89 சதவீதமாக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 11, 2020 அன்று 24 மணி நேர இடைவெளியில் 74,383 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 12 அன்று சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் 1, 35,926 ஆக இருந்தது. மொத்த தொற்றுநோய்களில் இது 1.25 சதவீதமாகும்.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,14,74,683 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம் 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கோவிட் -19 (COVID-19) எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் கடந்தது. அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 அன்று ஒரு கோடியை தாண்டியது.
ஐ.சி.எம்.ஆர் படி, மார்ச் 31 வரை 24,47,98,621 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 11,25,681 மாதிரிகள் புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டன. 459 புதிய உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 227, பஞ்சாபில் இருந்து 39, சத்தீஸ்கரைச் சேர்ந்த 39, கர்நாடகாவைச் சேர்ந்த 26, தமிழ்நாட்டிலிருந்து 19, கேரளாவைச் சேர்ந்த 15 மற்றும் தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 11 பேர் உள்ளனர்.
கொரோனா தொற்றால் (Coronavirus) மகாராஷ்டிராவைச் சேர்ந்த 54,649, தமிழ்நாட்டிலிருந்து 12,719, கர்நாடகாவைச் சேர்ந்த 12,567, டெல்லியில் இருந்து 11,027, மேற்கு வங்கத்திலிருந்து 10,329, உத்தரபிரதேசத்திலிருந்து 8,811, உத்தரபிரதேசத்திலிருந்து 7,217 மற்றும் ஆந்திராவில் இருந்து 7,217 பேர் உட்பட மொத்தம் 1,62,927 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர்.
70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா காரணமாக மோசமடைந்த நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.
ALSO READ: மோசமாக பரவும் கொரோனா தொற்று, ஆபத்தில் முழு நாடு: அரசு எச்சரிக்கை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR