கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 1,04,256 பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,01,478 பேர் ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு 27,862 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 1,31,826 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,837 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இத்தாலியில் மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 86,498 ஆக அதிகரித்துள்ள நிலையில், 9,134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,950 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 


சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த, வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.