COVID Vaccination Drive இந்த மாநிலங்களில் நிறுத்தப்பட்டது: காரணம் இதுதான்
CoWIN செயலியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக சில இடங்களில் தடுப்பூசி போடும் செயல்முறை நிறுத்தப்பட்டது.
புதுடில்லி: இந்தியா சனிக்கிழமையன்று மிகப்பெரிய, நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி செயல்முறையை துவக்கியது. 1,91,181 சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்கள் COVID-19-க்கு எதிரான முதல் டோசைப் பெற்றனர்.
3,352 அமர்வுகளில் 16,755 சிறப்பு பயிற்சி பெற்றவர்களால் நாடு தழுவிய முறையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையின் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 3,429 பேருக்கும் நோய்த்தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
இருப்பினும், CoWIN செயலியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக சில இடங்களில் தடுப்பூசி போடும் செயல்முறை நிறுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது
மகாராஷ்டிராவில் (Maharashtra) சனிக்கிழமை கோவிட் -19 தடுப்பூசி போடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கோவின் செயலியின் (CoWIN App) தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 17, 18 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இலக்கை அடைய முடியவில்லை.
"இன்று (ஜனவரி 16, 2021) கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்தை செயல்படுத்தும்போது, CoWIN செயலியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதைக் காண முடிந்தது. இந்த சிக்கலை தீர்க்க மத்திய அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: நானும், என் குடும்பமும், நாம் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்: EPS
ஒடிசாவில் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டன
இதற்கிடையில், சனிக்கிழமையன்று தடுப்பூசி பெற்றவர்களை ஞாயிற்றுக்கிழமை கண்காணித்த பிறகு, மீண்டும் தடுப்பூசிக்கான பணிகளைத் துவங்கலாம் என ஒடிசா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. ஆகையால் அங்கு கோவிட் -19 (COVID-19) தடுப்பூசி போடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. "தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை நாங்கள் கண்காணிக்க விரும்புகிறோம்," என்று மாநில கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) கூறினார். தடுப்பூசி போடும் பணிகள் திங்கள் முதல் தொடரும்.
மேலும், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், CoWIN போர்ட்டலில் இருந்து உருவாக்கப்படும், தடுப்பூசியைப் பெறுவதற்கான கட்டாயச் செய்தி தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சிலர் தெரிவித்தனர்.
சர்வர் செயலிழப்பு காரணமாக CoWIN செயலியில் எற்பட்ட சிக்கல்கள் குறித்து கர்நாடகாவில் பல மையங்கள் புகாரளித்தன. ஜனவரி 9 ஆம் தேதி பெங்களூருவில் நடந்த சோதனை தடுப்பூசி (Vaccine) செயல்முறையின் போதும் இந்த செயலியில் செயலிழப்பு காணப்பட்டது. அப்போது சுகாதார ஊழியர்கள் தாங்களாகவே தடுப்பூசிக்கான ஆவணங்களை பூர்த்தி செய்தனர்.
சனிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் தடுப்பூசி செயல்முறையை துவக்கி வைத்தார். இது ஒரு பெரிய சாதனை என்று அவர் பாராட்டினார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தி, தடுப்பூசிகளை வெற்றிகரமாக வெளியிடுவதில் அனைவரது முயற்சிகளையும் பங்காளிப்பையும் பாராட்டினார்.
ALSO READ: தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் சிறிய தொற்று ஒரு நல்ல அறிகுறி: AIIMS இயக்குநர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR