8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், அதுக்குறித்து வரும் 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
புது டெல்லி: கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், அதுக்குறித்து வரும் 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி தொடர்பான பிரச்சினைகளை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.
இந்த சந்திப்பு, ஏப்ரல் 8 ஆம் தேதி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெறும். பல மாநிலங்களில் கோவிட் -19 தொற்று பரவல் எழுச்சி பெற்று வருவதைக் குறித்து பிரதமர் மோடி விவாதிப்பார்.
டெல்லியில் COVID-19 தொற்று பெருமளவில் அதிகரித்த நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் அட்மி கட்சியின் தலைவரும் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், புதிய தடுப்பூசி மையத்தைத் திறப்பதற்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். தடுப்பூசிக்கான வயது வரம்பில் தளர்வு மற்றும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், புதிய தடுப்பூசி மையங்களைத் திறப்பதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி திறக்கப்பட்டால், டெல்லி அரசு 3 மாதங்களுக்குள் டெல்லி குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR