புது டெல்லி: மத்திய அரசாங்கத்தின் தேசிய கோவின் (Cowin) தரவுகளின்படி, கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை 22 கோடி பேர் பதிவுசெய்துள்ளனர். இதுவரை 18 கோடியே 38 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 14 கோடி 30 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 4 கோடி 7 லட்சம் பேருக்கு இரண்டாவது டோசும் செலுத்தப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவின் தளத்தின் (cowin.gov.in) தரவுகளின்படி, இதுவரை 21 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 406 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர். இவர்களில், 18-44 வயதுக்குட்பட்டவர்கள் 7 கோடி 91 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேரும், அதேபோல 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 கோடி 86 லட்சத்து 32 ஆயிரத்து 792 பேரும் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 26 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் மட்டுமே இன்று (திங்கள்கிழமை) பதிவு செய்துள்ளனர்.


தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே ஒரே மாதிரியான விகிதம் இருப்பதாக தரவு காட்டுகிறது. பெரிய அளவில் மாறுபாடு இல்லை. இந்தியாவில் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி விகிதம் கோவிஷீல்டு (Covishield) உடன் ஒப்பிடும்போது மிக அதிகம். இதுவரை அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதேபோல 18-30 வயதுடையவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.


ALSO READ |  கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை


இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி (Corona Vaccination) அடிப்படையில் மாநிலங்களின் விவரங்களை பார்த்தால், மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர். குஜராத்தில் மொத்தம் 1 கோடி 50 லட்சம், கர்நாடகாவில் 1 கோடி 15 லட்சம், ராஜஸ்தானில் 1 கோடி 54 லட்சம், உத்தரபிரதேசத்தில் 1 கோடி 52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 


மேற்கு வங்காளத்தில் 1 கோடி 27 லட்சம், மத்திய பிரதேசத்தில் 92 லட்சம், கேரளாவில் 85 லட்சம், தமிழ்நாட்டில் 71 லட்சம், ஒடிசாவில் 67 லட்சம், தெலுங்கானாவில் 55 லட்சம், டெல்லியில் 47 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல பீகாரில் 91 லட்சம் பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 61 லட்சமும், அசாமில் இருந்து 34 லட்சமும் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.


ALSO READ |  Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மத்திய அரசாங்கம் தடுப்பூசி அறிமுகப்படுத்தத் தொடங்கியது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி போட ஒரு தடையாக உள்ளது. தற்போது, ​​கோவிஷீல்ட் (Covishield), கோவாக்சினுடன் இணைந்து ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி (Sputnik-V Vaccine) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


இந்தியாவில் கொரோனாவின் தாக்குதலைக் கருத்தில் கொண்டு தடுப்பூசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என  நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கமும் மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் தடுப்பூசி பற்றாக்குறை, மறுபுறம் ஒரே தடுப்பூசிக்கு வெவ்வேறு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு ரூ. 150 என்ற விகிதத்தில் தடுப்பூசி விற்கப்படுகிறது. ஆனால் மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது பேரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதிக விலைகள் நிர்ணிக்கப்பட்டு இருந்தாலும், மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை.


ALSO READ |  18+ அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி: எங்கே, எப்படி பதிவு செய்வது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHinduatanTamil மற்றும் டிவிட்டரில்  @ZeeHinduatanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR