Covishield தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் இரத்த உறைவு ஏற்படுமா? விளக்கமளித்தது சுகாதார அமைச்சகம்

இரத்தம் உறைதல் தொடர்பான அனைத்து விளைவுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் ஏற்பட்டுள்ளன. கோவாக்சின் செலுத்தப்பட்டவர்களில் இரத்த உறைவு தொடர்பாக AEFI கமிட்டிக்கு எந்த புகாரும் வரவில்லை.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2021, 05:30 PM IST
  • தடுப்பூசி எதிர்மறை விளைவுகள் குறித்து சுகாதார அமைச்சகம் அறிவுறைகளை வெளியிட்டுள்ளது.
  • தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
  • COVID-19 தடுப்பூசிகளின் பாதுகாப்பை MoHFW தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Covishield தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் இரத்த உறைவு ஏற்படுமா? விளக்கமளித்தது சுகாதார அமைச்சகம் title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்முறை தொடங்கப்பட்டதிலிருந்து, 23000 க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இவை நாட்டின் 684 மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 7000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தீவிரமான விளைவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 498 தீவிரமான விளைவுகள் பற்றிய விசாரணையை AEFI கமிட்டி செய்தது. இவர்களில் 26 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இரத்த உறைவு ஏற்படும் சாத்தியக்குறு 10 லட்சத்தில் 0.61% ஆக உள்ளது. 

அனைத்து விளைவுகளும் கோவிஷீல்ட் தடுப்பூசியிலேயே ஏற்பட்டுள்ளன 
இரத்தம் உறைதல் தொடர்பான அனைத்து விளைவுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி (Vaccine) செலுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் ஏற்பட்டுள்ளன. கோவாக்சின் செலுத்தப்பட்டவர்களில் இரத்த உறைவு தொடர்பாக AEFI கமிட்டிக்கு எந்த புகாரும் வரவில்லை. இங்கிலாந்தில் பத்து லட்சம் பேரில் நான்கு பேருக்கும் ஜெர்மனியில் பத்து லட்சம் பேருக்கு 10 பேருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் இது குறித்த ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியது
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிஷீல்ட் செலுத்திக்கொள்பவர்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை  வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டு 20 நாட்கள் வரை AEFI (Adverse events following immunization), அதாவது எதிர்மறை விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பக்க விளைவுகள் ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடத்திலேயே தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ: 2021 இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு

இரத்த உறைதல் தவிர, மார்பு வலி, மூச்சுத் திணறல், வயிற்று வலி, பலவீனம், பார்ப்பதில் சிரமம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அமைச்சகம் கூறியுள்ளது. கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருக்கு கூட இரத்த உறைவுக்கான பிரச்சனை ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. 

பக்க விளையுகள் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு
இந்தியாவில் AEFI புள்ளிவிவரங்கள் மூலம், இந்தியாவில் இரத்த உறைவு நிகழ்வுகள் 10 லட்சத்துக்கு 0.61% ஆக உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த அளவு இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கு 4 ஆகவும் ஜெர்மனியில் பத்து லட்சத்துக்கு 10 ஆகவும் உள்ளது. இந்தியாவில், 2021 ஏப்ரல் 27 வரை 13.4 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. COVID-19 தடுப்பூசிகளின் பாதுகாப்பை MoHFW தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான பாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன.

ALSO READ: Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News