Covid Updates India May 29 : கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் தத்தளித்து வந்த இந்தியாவில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் தத்தளித்து வந்த இந்தியாவில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
ஆறு வாரங்களுக்கு பிறகு, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கு குறைவாக பதிவாகிறது. ஆனால், பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலையை அதிகரிப்பதாக இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயில் இருந்து மீள்பவர்களின் சதவிகிதம் 90.80% ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.73 லட்சம் புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,84,601 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்பு விகிதம் 90.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Also Read | CM Stalin: சிங்கப்பூர் Oxygen Cylinders 8 மாவட்டங்களுக்கு விநியோகம்
தற்போது, கருப்புப் பூஞ்சை பாதிப்பு, ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இதற்கிடையில், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவை தடுக்கும் முயற்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி இயக்கத்தில் தொய்வு ஏற்படுட்டுள்ளது.
குறிப்பாக 18-44 வயதுக்கு இடையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதாக அறிவிக்கப்பட்டாலும், தடுப்பூசி பற்றாக்குறை சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read | Positive Angle of Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR