புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசி கோவோவேக்ஸ் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (SII) CEO ஆதார் பூனவல்லா புதன்கிழமை (மே 4, 2022) தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா  என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா ட்வீட் செய்துள்ளார்.


கோவோவேக்ஸ் இப்போது இந்தியாவில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு ஆதார் பூனவல்லா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.


"கோவோவேக்ஸ் (நோவோவேக்ஸ்), இப்போது இந்தியாவில் குழந்தைகளுக்காகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவிலும் விற்கப்படும், ஒரே தடுப்பூசி ஆகும். இது 90 சதவிகித செயல்திறன் கொண்டது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோளுக்கு இணங்கும் வகையில் உள்ள மற்றொரு தடுப்பூசி, ” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.


மேலும் படிக்க | 6-12 வயது குழந்தைகளுக்கு Covaxin அவசரகால பயன்பாட்டிற்கு DCGI அனுமதி


நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGEI) கடந்த வாரம் 12 -17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான SII நிறுவனத்தின் கோவோவேக்ஸ் என்னும்  கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக அரசாங்கம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை அனுமதித்தது குறிப்பிடதக்கது.


மறுபுறம், கோவோவேக்ஸ் கிடைப்பது குறித்து பல பயனர்கள் டிவிட்டரில் புகார் அளித்தனர். 18+ தடுப்பூசி பயனாளிகளுக்கு CoWIN செயலியில் கோவோவேக்ஸ் விருப்பம் இல்லை என்று புகார் அளித்தனர். 


இந்தியாவில் ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்ஸின் கோவாக்சின் தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது. இருப்பினும், நாடு 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயாலஜிகல் E இன் கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


இதற்கிடையில், புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஒரு நாளில் 3,205 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை 19,509 ஆகவும், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,88,118 ஆகவும் உள்ளது.


காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 24 மணி நேரத்தில் 31 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 5,23,920 ஆக உள்ளது. 


மேலும் படிக்க | பூஸ்டர் டோஸ்: 18+ வயதினருக்கு அனுமதி; தடுப்பூசி கட்டணம் மற்றும் பிற விபரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR