புது டெல்லி: ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கில் சிபிஐ கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் ஜேஎன்யுஎஸ்யூ தலைவருமான கன்னையா குமார் (Kanhaiya Kumar) உட்பட 10 பேர் மீதான வழக்குக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லி அரசின் அனுமதியை அடுத்து, இதுக்குறித்து பேசிய கன்னையா, இனி இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உங்கள் தொலைக்காட்சி நீதிமன்றத்திற்கு பதிலாக (விவாதம்), நீதிமன்றத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உமர் காலித் மற்றும் அனிர்பன் ஆகியோரும், ஆளும் அரசாங்கத்தின் தவறான கூற்றை அம்பலப்படுத்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லி அரசின் அனுமதியை அடுத்து, உடனேயே தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசத்துரோக வழக்குக்கு தில்லி அரசு அனுமதி வழங்கியதற்கு நன்றி" என்று கன்னையா கூறியுள்ளார். டெல்லி காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், நீதிமன்றத்தில் விரைவாகவும் விரைவான விசாரணை வேண்டும் மற்றும் உங்கள் தொலைக்காட்சி நீதிமன்றத்திற்கு பதிலாக நீதிமன்றத்தில் நீதியை உறுதிப்படுத்த வேண்டும். சத்யமேவ் ஜெயதே எனப் பதிவிட்டுள்ளார்.


இந்த வழக்கில் கன்னையாவைத் தவிர, குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில், ஜே.என்.யூ முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் அனிர்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் பீகாரில் பெகுசாரையைச் சேர்ந்த பாஜகவின் கிரிராஜ் சிங்குக்கு எதிராக கன்னையா சிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


 



இந்த நாட்களில், பீகாரில் "அரசியலமைப்பு காப்போம்" என்ற பேரணியை நடத்தி வரும் கன்னையா, தனது மற்றொரு ட்வீட்டில், "தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மத்திய அரசாங்கம் திசை திருப்புகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த முழு வழக்கிலும் அரசியல் ஆதாயங்களுக்காகவும், மக்களை அவர்களின் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும் தேசத் துரோகச் சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும், இந்த வழக்கில் நீதிமன்றமும் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.


மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான உமர் மற்றும் அனிர்பன் ஆகியோரும் ட்வீட் செய்து தில்லி அரசாங்கத்தின் முடிவில், "எங்களுக்கு எந்தப் பிரச்சினையையும் இல்லை என்று கூறியுள்ளனர். 


உமர் ட்வீட் செய்து, "என்னிடமிருந்தும் அனிர்பனிடமிருந்தும் அறிக்கை: தேசத்துரோக வழக்கில் எங்களை விசாரிக்க டெல்லி அரசு ஒப்புதல் அளிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. நாங்கள் நிரபராதிகள் என்று நாங்கள் நம்புகிறோம். நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வழியாகவே நடைபெற வேண்டும் என நாங்கள் கோரியிருந்தோம் எனப் பதிவிட்டுள்ளார்.


 



மேலும் தனது ட்வீட்டில், "நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிப்பது என்பது, "ஆளும் அரசாங்கத்தால் நடத்தப்படும் வழக்கு பொய்யானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்பதை நிரூபிக்கும். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளின் நிழலில் நாங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறோம். நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும். ஆளும் அரசாங்கத்தின் பொய்களையும், தேசியவாதி என்ற அவர்களின் தவறான கூற்றையும் அம்பலப்படுத்துவோம் என்றார்.


ஜனவரி 14 ஆம் தேதி டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பிப்ரவரி 9, 2016 அன்று ஜே.என்.யூ வளாகத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும், கன்னையா, உமர் உட்பட 10 பேர் கோஷங்களை ஆதரித்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.