கேரள மாநிலம் கசரகோட் மாவட்டத்தில் CPI(M) உறுப்பினர் மர்மமனா முறையில் கொலை செய்யப்பட்டுள்ளளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் கசரகோட் பகுதியில் CPI(M) உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது இறப்பிற்கு காரணம் பாஜக-வை சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


உடலின் பல பாகங்களில் கத்தி குத்துகளுட்ன மீட்கப்பட்ட CPI(M) உறுப்பினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல பட்டதாகவும், ஆனால் அவர் வழியிலேயே இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளா மாநிலத்தில் CPI(M) மற்றும் பாஜக-விற்கு இடையில் தொடர்ந்து பிரச்சணைகள் நடைப்பெற்று வருவதும், இதனால் இரு கட்சி உறுப்பினர்களும் மர்மமான முறையில் இறப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த தொடர் பலிகளுக்கு பிரதான கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.



சமீபத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் அடித்து கொல்லபட்டதை அடுத்து அவரது மரணத்திற்கு காரணம் CPI(M) உறுப்பினர்கள் தான் என பாஜக தலைவர் அமித்ஷா உள்பட அக்கட்சியினர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அவர்களும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் தினம் உயிரை பனையம் வைத்து வாழ்ந்து வருகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.


கடந்த ஜூன் மாதம் முகம் தெரியாத நபர்கள் கொண்ட குழு ஒன்று கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த விவகாரத்தால் CPI(M) கட்சியினை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவகாரத்திற்கு பின்னர் இருப்பது முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தான் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. 


இந்நிலையில் தற்போது நடைப்பெற்று இருக்கும் இந்த மர்ம கொலை அம்மாநில இருகட்சி உறுப்பினர்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.