உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. செங்கல்லால் அவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் மோடிநகர் பகுதியில் உள்ள கடனா பகுதியில் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், தனது மகனைக் கொன்றதாகக் கூறி ஒரு பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஜ்னோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (நாடு) ராம் அர்ஜ் கூறுகையில், நன்ஹியும் அவரது காதலரான டிங்கு சைனியும் ஜனவரி 16ஆம் தேதி 10 வயது வருணைக் கொன்றுவிட்டு, சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாபர்பூர் கோட் கிராமத்திற்கு அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் உடலை வீசினர் என கூறப்படுகிறது. பின்னர் சடலம் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Crime News: 90 வயது மூதாட்டியைக் கற்பழித்த காமக் கொடூரன்!


வருண் கழுத்தை நெரித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக ஏஎஸ்பி மேலும் கூறினார். சில காலத்திற்கு முன்பு நன்ஹி அக்கம் பக்கத்தில் வசிக்கும் டிக்குவுடன் உறவு வைத்திருந்ததாகவும், அவரது மகன் அவளை ஆட்சேபனைக்குரிய நிலையில் பார்த்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சந்த்பூர் காவல் நிலையத்தில் நன்ஹி மற்றும் டிக்கு மீது ஐபிசி பிரிவுகள் 363 (கடத்தல்), 302 (கொலை), மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஏஎஸ்பி கூறினார்.


மற்றொரு சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதல் உறவை எதிர்த்ததால், தனது தாயை கழுத்தை நெரித்து கொன்றான். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பாக்பத்தின் பரோட் நகரில் வியாழக்கிழமை நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட ரஜத் டெல்லியில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.


பாக்பத் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நீரஜ் குமார் ஜதாவுன் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட ரஜத் சிங் ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்த, நிலையில், இதனை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ரஜத் தனது தாய் முனேஷ் தேவியுடன் சண்டையிட்டு பின்னர் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றார். முனேஷின் அலறல் சத்தம் கேட்டு ரஜத்தின் தந்தை ஜிதேந்திர சிங் சம்பவ இடத்திற்கு வந்ததாக அதிகாரி கூறினார். ஜிதேந்திர சிங் முனேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | மாமாகுட்டிக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி..! எலும்புக்கூடால் சிக்கியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ