COVID-19 ஊரடங்கால் மும்பையில் குற்ற விகிதம் வெகுவாக குறைந்தது...
கொரோனா முழு அடைப்பால் மும்பையில் குற்ற விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா முழு அடைப்பால் மும்பையில் குற்ற விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், நகரில் கடந்த இரண்டு மாதங்களில் ‘சங்கிலி பறிப்பு (chain snatching)’ வழக்குகள் இரண்டு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்ற அறிக்கைகளும் குறைவாகவே வந்துள்ளது, சங்கிலி பறித்தல், திருட்டு, வீட்டு பூட்டு உடைத்தல், கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற வழக்குகளும் பெருமளவில் குறைந்துள்ளது. இருப்பினும், வாகன திருட்டு வழக்குகள் மட்டும் நீடிக்கிறது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
READ | ஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது.. ஆனால் சில பாதைகளில் அரசு அனுமதிக்கலாம்...
காவல்துறை தகவல்கள் படி மும்பையில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 11,895 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 9,415 வழக்குகள் முழு அடைப்பு விதி மீறல் தொடர்பனாது.
ஊரடங்கின் போது, வீதிக் குற்றச் சம்பவங்கள் குறைந்துவிட்டன. இதற்கு காரணம், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தங்கியிருப்பதால் குற்றவாளிகளுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் சாலையில் காவல்துறையினர் அதிக அளவில் இருப்பதால் ஊரடங்கு காலத்தில் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்த முழு அடைப்பு காலத்தில் நகரம் முழுவதும் 199 சோதனைச் சாவடிகள் செயல்பட்டன. இது குற்ற விகிதம் குறைந்து வருவதை நேரடியாக பாதித்தது என்றும் மும்பை காவல்துறை செய்தித் தொடர்பாளர் DCP பிரணய் அசோக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 5,703 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 5,278 வழக்குகள் ஊரடங்கு விதி மீறல், மே மாதத்தில், 2,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1,877 வழக்குகள் ஊரடங்கு விதி மீறல் தொடர்பானது, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பதிவான வழக்குகளின் விகிதம் மிகவும் குறைவு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
READ | COVID-19 பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது!
இருப்பினும், வேலை இழப்பு மற்றும் ஊரடங்கு தளர்வு போன்ற பல காரணங்களால் வரும் மாதங்களில் குற்ற விகிதம் அதிகரிக்கக்கூடும் என்று மும்பை காவல்துறை நம்புகிறது.