மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஸ்மிருதி இராணி தான் பட்ட படிப்பு ஏதும் படிக்கவில்லை என குறிப்பிட்டள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014-ஆம் ஆண்டு அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி அப்போது தனது வேட்புமனுவில் பட்டதாரி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் பட்டப்படிப்பு எதையும் படிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. 


பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் நீதிமன்றம் உதவியுடன் தப்பி வந்த ஸ்மிருத்தி இராணி தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி களமிறங்கியுள்ளார். 


நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தாம் பட்டபடிப்பு ஏதும் படிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய வேட்புமனுவில் அவர் பட்டாதாரி எனக் குறிப்பிடவில்லை. தனது வேட்பு மனுவில் 1991-ல் மேல்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் குறிபிட்டுள்ள அவர், இதேபோல 1993-ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் 1994-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பில் சேர்ந்து படிப்பை நிறைவு செய்யாமல் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பட்டதாரி என குறிப்பிட்ட இராணி தற்போது தான் பட்டதாரி இல்லை என குறிப்பிட்டுள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.


முன்னதாக டெல்லி பல்கலை கழகத்தில் பட்டபடிப்பு முடித்தாக தவறான தகவல் கொடுத்ததாக வழக்கு தள்ளுபடியான நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஸ்மிருதியின் கல்வி சான்றிதழ் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.