வயலுக்குள் நுழைந்த முதலை.... கிராமத்தில் ஏற்பட்ட பரபரப்பு...!!!
குஜராத்தில் உள்ள வதோத்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் நுழைந்த முதலை அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது
பார்ப்பதற்கே பயங்கரமாக தோற்றம் கொண்டவை. ஒரே அடியில் ஆளைக் கொள்ளும் வல்லமை பெற்றவை.
முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்காகும். இவை நீரில் நிலத்தில் என இரண்டிலும் வாழ்பவை. முதலைகள் அபாரமான ஜீரண சக்தி யை கொண்ட ஒரு விலங்கு. இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது.
இந்த பயங்கரமான விலங்கை பார்த்தால் மக்களுக்கு பயம் வருவது சகஜம் தானே..
குஜராத்தின் வதோத்ரா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
ALSO READ | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!
குஜராத்தின் மாவட்டத்திலுள்ள கீழாம்பூர் என்ற கிராமத்தில் உள்ள வயல் ஒன்றில் 7 அடி நீள முதலை நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமவாசிகள் முதலையை பிடித்து மாநில வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
முதலை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், கீழாம்பூர் கிராமத்தில் முதலை வயலுக்குள் நுழைந்ததாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அங்கே சென்று பார்த்தபோது வயலில் முதலை இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் முதலையை பிடித்து குஜராத்தின் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஆனால் இந்தப் பகுதியில் முதலில் நுழைவது இது முதல் முறையல்ல. இது இது போன்று நடக்கும் ஏழாவது சம்பவம் என்று அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!
முதலை ஆளையே அடித்துக் கொள்ளும் வல்லமை பெற்றது என்பதால் அதை பிடிக்கும்போது அனைத்து வகையான முன்னெச்சரிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டது என முதலை பிடிக்க வந்தவர் கூறினார்.
எப்படியோ, முதலை யாரையும் தாக்காமல், பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.