தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் மோடி ஆட்சிக்கு முன்பும் நடந்துள்ளன என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2016 ஆம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தலைமையேற்று நடத்திய முன்னாள் லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ பலரும் கூறுவது போல சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்லது எல்லைச்சண்டைகள் கடந்த காலங்களில் கூட ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை நடைபெற்ற இடங்களும், தேதிகளும் எனக்கு சரியாக தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, தேர்தல் காலங்களில் ராணுவத்தை தங்கள் கட்சிக்காக பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.


நேற்று முன் தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் நடத்தப்பட்டன எனவும், ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்தது. இதற்கு பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் காங்கிரஸ் ஆட்சியில் துல்லிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என தெரிவித்த நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.