நாடுமுழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாப்பட்டு வரும் நிலையில், மத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் ஹோலி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமாநில இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஹோலி ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.


கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு என கருதப்படுகிறது. 


வட நாட்டில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இந்தப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டிஸ்கர் எல்லை பகுதியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினர் ஆரவரமாக ஹோலி கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது!