CTET தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டது CBSE
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
CBSE மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) 15 வது பதிப்பு 16.12.2021 முதல் 13.01.2022 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி சார்ந்த CBT (Computer Based Test) முறையில்தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. CTET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 20-09-2021 முதல் தொடங்கப்பட்டுள்ளது என CBSE தெரிவித்துள்ளது.
முன்னதாக, சி.பி.எஸ்.இ (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. CBSE அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in-ல் மாணவர்கள் அட்டவணை விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை (Board Exams) எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ:
Term 1 - பொதுத் தேர்வுகளின் முதல் பருவம் 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இது அப்ஜெக்டிவ் வகை தேர்வாக இருக்கும், தேர்வின் காலம் 90 நிமிடங்களாக இருக்கும்.
Term 2 - பொதுத் தேர்வுகளின் முதல் பருவம் 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். இது நாட்டில் அப்போதுள்ள கோவிட் -19 நிலையைப் பொறுத்து சப்ஜெக்டிவ் / அப்ஜெக்டிவ் தேர்வாக இருக்கும்.
ALSO READ: வைரலாகும் CBSE 'Date Sheet' ; CBSE கூறுவது என்ன..!!!
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கு 114 பாடங்களையும், 10 ஆம் வகுப்பில் 75 பாடங்களையும் வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ மொத்தம் 189 பாடங்களின் தேர்வுகளை நடத்த வேண்டும்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2022 காலை 11.30 மணி முதல் தொடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் முன்பிருந்த 15 நிமிடங்களுக்குப் பதிலாக 20 நிமிடங்கள் வாசிப்பு நேரம் அளிக்கப்படும்.
ALSO READ: TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR