TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது

தமிழகத்தில் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2021, 07:03 PM IST
TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது title=

தமிழகத்தில் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது. மாணவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் இன்னும் நெறிமுறைப்படுத்தபடவில்லை என்பதால், நவம்பர் 1ம் தேதி 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும். நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் குறித்து பின்னர் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ALSO READ: Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP

மேலும், தமிழகத்தில் (Tamil Nadu)  நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்காமல் காலம் தாழ்த்த கூடாது எனவும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நவம்பர் 1 முதல் அங்கன்வாடி, ப்ளே ஸ்கூல் மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை அடுத்த மாதம் முதல் பள்ளிகளுக்கு வர தமிழக அரசு (TN Government) அனுமதித்தது குறிப்பிடத்டக்கது.

ALSO READ: T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News