காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் இறந்ததுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல இடங்களில் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூட அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் ஷெகர் இ காஸ், புல்வாமா, பாம்போர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தடை உத்தரவு நீடித்து வருகிறது. 


இந்த நிலையில், 52-வது நாளான இன்று காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் ஒரு சில இடங்களை தவிர்த்து ஏனைய இடங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.