கரன்சி விவகாரம்: மாநிலங்களவையில் மன்மோகன் சிங் உரை
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங்களைவைக்கு வந்துள்ளார்.
புதுடெல்லி: மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங்களைவைக்கு வந்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவாதத்தை மாநிலங்களவையில் மன்மோகன் சிங் பேசினார்.
500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினையை விவாதிக்க வந்துள்ளதாக தெரிவித்த அவர்
ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டில் மாபெரும் நிர்வாக குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிர்வாக தோல்வியால் ரூபாய் நோட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மன்மோகன் சிங் தெரிவித்தார்.
50 நாட்கள் துன்பத்தை அனுபவித்தால் மக்களுக்கு பேரழிவு வந்து சேரும் என்று அவர் தெரிவித்தார். மோடி சொன்னது போல் 50 நாட்கள் மக்கள் துன்பத்தை அனுபவிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வேளாண்மை, சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்றும், அரசு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள் முடங்கிவிடும் என்றும் ரூபாய் நோட்டு பிரச்சினை விவாதத்தில் மன்மோகன் சிங் தெரிவித்தார்.