கார்கோன்: மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், ஒரே நேரத்தில் 9 பேருக்கு புதிதாக கொரோனா நேர்மறை சோதனை வந்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால், இவர்களில் 6 பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தில் முடிதிருத்தும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆடைகளுடன் பலருக்கு மொட்டையடித்துள்ளார் மற்றும் கட்டிங்-ஷேவிங் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அவரிடம் சேவை பெற்ற பெரும்பாலான மக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 5 ஆம் தேதி, இந்தூரின் சைஃபி ஹோட்டலில் பணியாளராக பணிபுரிந்த மனோஜ் குஷ்வாஹா, பணிமாற்றம் ஏற்பட்டத்தால், அந்த பகுதிக்கு சென்ற அவர், அங்கு கிராமத்திலிருந்து ஒரு சிகையலங்கார தொழிலாளரிடம் முடிதிருத்தம் மற்றும் ஷேவிங் செய்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 


சலூன் கடைக்காரர் மனோஜ் குஷ்வாஹாவவுக்கு [கொரோனா தொற்று பாதிப்பு] பயன்படுத்திய ஆடைகளைப் பயன்படுத்தி கிராமத்தில் 8-10 பேருக்கு மொட்டையடித்துள்ளார். இந்த விசியம் தெரியவர அவர்கள் அனைவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த அறிக்கையில் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரிய வந்துள்ளது.


கார்கோன் சி.எம்.எச்.ஓ திவ்யேஷ் வர்மா கூறுகையில், ஒரே கிராமத்தில் இருந்து இரவில் 6 மற்றும் அதிகாலை 3 நேர்மறை பாதிப்பு பதிவாகியுள்ளன. பார்கானின் 6 கிராமவாசிகளின் அறிக்கைகள் சாதகமாக வந்துள்ளன. இதன் பின்னர் கிராம எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டன.


கார்கோனில், கடந்த இரண்டு-மூன்று நாட்களில் கொரோனா நேர்மறை நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10 புதிய நோய் தொற்று பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மாலைக்குள், கார்கோனில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 6 பேர் இறந்துள்ளனர்.