வங்கக் கடலில் அசானி புயல் வீசி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, தென்கிழக்குப் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் ஆசானி புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்கிறது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு-மத்திய வங்கக்கடலில் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அச்சம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டிருந்தது, நிகோபாருக்கு மேற்கு-வடமேற்கே 450 கிமீ தொலைவிலும், போர்ட் பிளேயருக்கு மேற்கே 380 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவிலும், பூரிக்கு 1030 கிமீ தெற்கே தென்கிழக்காகவும் இருந்தது.


மே 10-ம் தேதிக்குள் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி வங்கக் கடலின் வடமேற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, அது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


இந்த புயல் ஒடிசா அல்லது ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்பில்லை, ஆனால் கடலோரப் பகுதிக்கு இணையாக நகரும் என்று IMD இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். இந்த புயல் அடுத்த வாரத்தில் கரையோரப் பகுதியை தாக்காமல் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த புயலின் தாக்கத்தால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளில் செவ்வாய்க்கிழமை முதல் பலத்த காற்று மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி புயலுக்கு சிங்கள மொழியில் கோபத்தை குறிக்கும் வார்த்தையான அசானி என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்


IMD இன் படி, மே 10 மாலைக்குள் சூறாவளி வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையிலிருந்து மேற்கு-மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. புயலின் வேகம் மணிக்கு 111 கிலோமீட்டராக இருக்கும்.


கடுமையான சூறாவளி புயல் செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக வலுவிழந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செவ்வாய்க்கிழமை முதல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் தென் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த தமிழக மீனவர்கள்! தொழில்போட்டியால் குறையும் மீனவர்களின் ஒற்றுமை!


மே 10 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒடிசா கடற்கரையை ஒட்டிய கடல் நிலை மே 9ஆம் தேதி கொந்தளிப்பாகவும், மே 10ஆம் தேதி மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 10ஆம் தேதி கடல் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | மீனவ குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR