Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று  ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரரும் அதிபரும் ஆன கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி  நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 4, 2022, 09:02 AM IST
  • ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான முடிவு, இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் title=

கொழும்பு: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.  நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டதன் மூலம் அரசியலமைப்பு கடமையில் அவர்கள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எனக் கோரும் மனுவை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் செவ்வாய்க்கிழமை சமர்பித்தது.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரரும் அதிபரும் ஆன கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி  நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவையும் அமைச்சரவையையும் ஆட்சியில் இருந்து அகற்ற, பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படும். ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 வாக்குகளை மட்டுமே உள்ளன என்றாலும், சிறிய எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகியவர்களின் வாக்குகளையும் பெற முடியும் என அக்கட்சி நம்புகிறது. ஆளும் கட்சிக்கு கிட்டத்தட்ட 150 வாக்குகள்  உள்ளது என்றாலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்த பலம் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்

புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கிய பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வெளிநாட்டுக் கடன்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதாக அண்மையில் அறிவித்ததை அடுத்து இலங்கை திவால்நிலையின் விளிம்பில் உள்ளது. 2026 ஆம் ஆண்டளவில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ள 25 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடன்களை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நிற்கு நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் வகையில் உள்ளது.

அரசாங்க உயர் அதிகாரிகள் அதிகளவில் பணத்தை அச்சடித்ததாகவும், இயற்கை விவசாயத்திற்காக இரசாயன உரங்களை முழுமையாக  தடை செய்ததன் மூலம் விவசாய உற்பத்தி பெரிது பாதித்ததாகவும், கோவிட்-19 தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஆர்டர் செய்யத் தவறிய, பின்னர் அதிக விலைக்கு வாங்குவதாகவும்  எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையை ஆண்ட ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களை ராஜினாமா செய்யக் கோரி, செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்து 25வது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News