தமிழகம், கேரளாவை புரட்டி எடுத்த ‘ஓகி‘ புயலானது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நெருங்கிக் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஓகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கேரளாவின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. 


இந்த புயல் கேரளாவை கடந்து பின்னர் அரபி கடல் வழியாக அங்கிருந்து லட்சத் தீவை நோக்கி சென்றது. அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேக காற்றுடன் பலத்த மழை கொட்டியது. 


தற்போது ஓகி புயல் லட்சத்தீவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் தீவிரமடைந்து வடகிழக்கு பகுதியை நோக்கி திரும்பி உள்ளது. 


"மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளான இன்று இரவு முதல் டிசம்பர் 6 வரை கடலோர பகுதியில் கடல் சீற்றம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். 


தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஓகி புயல் காரணமாக 18 பேர் பலியாகியுள்ளனர்.  


கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை ஆகியோரின் கூட்டுறவு நடவடிக்கைகளில் 357 மீனவர்கள் உட்பட 690 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


குறைந்தது தற்போது வரை புயல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர், 96 பேர் காணவில்லை. இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை  மீட்பு நடவடிக்கைகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றன.


இதற்கிடையில், 68 படகுகள் மகாராஷ்டிரா கடற்கரைக்கு வந்துள்ளன, இதில் இரண்டு படகுகள் தமிழ்நாட்டிலிருந்து மீதம் கேரளாவிலிருந்து வந்தவை ஆகும், "என அவர் கூறினார்.


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஓகி‘ புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.