தாய்லந்தின் தென் பகுதியில் வீசிய பபுக் (Pabuk) புயல், தற்போது அந்தமான் தீவுகளை நோக்கிச் செல்வதால் அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்து வளைகுடாவில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவுகளை நோக்கி சுமார் 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இன்று மாலை அந்தமான் கடலை கடக்குமென்றும்,  அப்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



புயல் கடந்துசென்றபோதும், கடலில் நீந்துவது, மீன்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க வேண்டும் எனவும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி தாய்லாந்தை தாக்கிய பபுக் சூறாவளின் தாக்கம், மியன்மாரின் சில பகுதிகளிலும் தொடர்ந்து உணரப்படுவதாக தெரிகிறது.