கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், மே 26ம் தேதியன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கும் என்று நம்பப்படுகிறது.


யாஸ் சூறாவளியால் எழும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் ஒடிசாவில் இரண்டு பொறியாளர் பணிக்குழுக்கள் மற்றும் அணியினரை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் எட்டு அணியினரையும்  மற்றும் ஒரு பொறியாளர் பணிக்குழுவையும் (Engineer Task Force) தயார் நிலையில் வைத்துள்ளது.  


Also Read | டவ் தே புயலில் காணாமல் போன Barge P305; 61 சடலங்கள் மீட்பு


ராணுவத்தைத் தவிர, இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.  மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்துடன் (Humanitarian Assistance and Disaster Relief) நான்கு கடற்படைக் கப்பல்களை காத்திருப்பதாகக் கூறியது. 


டைவிங் மற்றும் மருத்துவ குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையுடன் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்திய கடற்படையினர் ஈடுபடுவார்கள்.


வங்காள விரிகுடாவில் ஏற்படக்கூடிய சூறாவளி புயலின் தாக்கத்தை சமாளிக்க இந்திய கடலோர காவல்படையும் (Indian Coast Guard)  ஆயத்தநிலையில் உள்ளது.


Also Read | லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ அணி சாம்பியன் பட்டத்தை வென்றது


கடலோர காவற்படையின் இரண்டு விமானங்களும் இரண்டு கப்பல்களும் வங்காள விரிகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
யாஸ் சூறாவளி மே 24ஆம் தேதியில் இருந்து மே 26 வரை மேற்கு வங்காளம்-ஒடிசா கடற்கரைக்கு இடையே கரையக் கடக்கும்   என்று கணிக்கப்பட்டுள்ளது.


சூறாவளியைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் இருந்து புவனேஸ்வர் மற்றும் ஒடிசாவின் பூரி வரையிலான பல ரயில்களை வடக்கு ரயில்வே (Northern Railway) ரத்து செய்தது.


Also Read | ஓரின சேர்க்கை திருமணத்தை அயர்லாந்து சட்டப்பூர்வமாக்கிய நாள் May 22


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR