Cyclone Yaas: ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்தும் பாதிப்பு வீடியோ
யாஸ் புயல், ஒடிசாவில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்டும் வீடியோ இது....
மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள யாஸ் புயல், ஒடிசாவில் கரையைக் கடந்தது. இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் கனமழை பொழிகிறது.
யாஸ் சூறாவளி புதன்கிழமை அதிகாலை பத்ராக் மாவட்டத்தின் தம்ரா துறைமுகத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது.
130-140 கிமீ வேகத்துடன் காற்று வீசியது. யாஸ் புயல், ஒடிசாவில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்டும் வீடியோ இது....
சூறாவளி யாஸ் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரைக்கு அருகில் தம்ராவின் வடக்கே மற்றும் பாலசூருக்கு தெற்கே இன்று மதியம் கரையைக் கடந்தது.
ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
Also Read | Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR