ஃபானி புயல்: பாதிப்பை கணக்கிடும் பணிகள் தீவிரம்!
ஒடிசாவின் புரி பகுதியில் ஃபானி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
ஒடிசாவின் புரி பகுதியில் ஃபானி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் புரி பகுதியில் ஃபானி புயல் கரையை கடந்தது. இதனால் 14 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. 14 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான வீடுகளும், மின்கம்பங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மேலும் புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
மாநில அரசின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 30 சதவீதத்திற்கு அதிகமான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 1 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமையில் 9 பேர் அடங்கிய மத்திய குழுவினர் பாதிப்புகளை கணக்கிட ஒடிசா சென்றுள்ளனர். புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட உள்ளனர்.