இந்து மதத்தலைவர்களை கொலை செய்தும், தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும் இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்த இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வருடம் நவம்பர் மாதம், குஜராத்தின் பரூச் பகுதியில் பா.ஜ., தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது பயங்கரவாத செயலுக்கு இளைஞர்களை சேர்க்க அதுிகளவில் பணம் மற்றும் வெளிநாட்டில் பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்ட திட்டமிட்டுள்ளனர்.


இதற்கான சதித்திட்டம் கராச்சி மற்றும் தென் ஆப்ரிக்காவில் திட்டமிடப்பட்டது. அவர்கள், இந்தியாவில் உள்ள ஆட்கள் மூலம் தேவாலயங்களுக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீவைத்தல், மற்றும் இந்து தலைவர்களை கொல்லுதல் போன்றவற்றை செய்து மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


மேலும், கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க தலைவர்கள் மற்றும் விஹெச்பி பஜ்ரங் தள் தலைவர்கள் ஆகியோரை கொல்லவும், இதற்காக பாகிஸ்தானில் உள்ள ஜாவேத் சிக்னா மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள டி நிறுவனத்தின் ஜாகித் மியான் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு இதற்கான பட்டியலை தயாரிக்க கூறியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.