கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி 14 வயதுக்கு உட்பட்டோருக்கு உறியடி விழாவில் அனுமதி கிடையாது என மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தியில் கொண்டாப்படும் உறியடித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடக்கும். அப்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில், மும்பை ஐகோர்ட், கடந்த 2014-ம் தீர்ப்பு ஒன்று வழங்கியது. அந்த தீர்ப்பில் 18 வயதுக்கு உட்பட்டோர் இதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 


இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மும்பை ஐகோர்டுக்கு உத்தரவிட்டது. 


இந்த வழக்கு நேற்று மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது, இந்த விளையாட்டில், 14 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம். இந்த விளையாட்டுக்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். 


மேலும் இந்த விவகாரம், மாநில சட்டசபையின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதனால், இதில் எந்தத் தீர்ப்பையும் அளிக்க விரும்பவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு பிறப்பித்துள்ளதால், அதை நாங்கள் ஏற்கிறோம். 


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.