முகமது அலி ஜின்னா - நேரு விவகாரத்தில் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக திபெத்திய தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட திபெத்திய தலைவர் தலாய்லாமா மாணவர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய திபெத்திய தலைவர் தலாய்லாமா, பிரதமர் பதவியினை ஜவர்கலால் நேரு அவர்களுக்கு அளிக்காமல் முகமது அலி ஜின்னாவிற்கு, மகாத்மா காந்தி அவர்கள் அளித்திருந்தால் இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்து இருக்காது என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்... அப்போதைய காலக்கட்டத்தில் ஜின்னாவிற்கு பிரதமர் பதவியினை வழங்கவே காந்தி விரும்பினார், ஆனால் நேரு இந்த விஷயத்தில் தலையிட்டு தான் பிரதமராக பதவியேற்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



தலாய்லாமா அவர்களின் இந்த கருத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்பதோது அவர்., இவ்விவகாரம் தொடர்பாக தன் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கொருவதாக தெரிவித்துள்ளார்.