டெல்லியில் அடர் பனிமூட்டம்-வெப்பநிலை 10 °C பதிவு!!
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காரணமாக ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காரணமாக ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காரணத்தால் வெப்பநிலை 10 ° C பதிவாகியுள்ளது.
பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்குவதிலும், கிளம்பி செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.