கட்டாயத்தின் பேரில் அம்பானியுடன் Dassault ஒப்பந்தம்: பிரான்ஸ் மீடியா தகவல்..
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது பிரான்ஸ் பத்திரிகை..!
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது பிரான்ஸ் பத்திரிகை..!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் கூறவும், இந்த குற்றத்திற்கு பாஜக கட்சியினர் பதில் கொடுக்கவும் என வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், 36 ரபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவிடம் விற்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் டசால்ட்ஸ் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை கட்டாயத்தின் பேரில் இறுதி செய்தது என்று பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தைத் தவிர்த்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய பிரான்ஸ் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக, முன்னாள் அதிபர் பிராங்கோஸ் ஹோலாண்டே கூறியதையடுத்து, சர்ச்சை எழுந்தது.
எந்தவித நிர்ப்பந்தமும் திணிக்கப்படவில்லை என்று டசால்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில், ரிலையன்சுடன் பங்குதாரராக ஒப்பந்தம் செய்வதைத் தவிர டசால்ட்ஸ் நிறுவனத்திற்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும், இந்திய அரசும் மறுத்துள்ளது.