Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை கோரி அரசு அளித்த வீட்டில் இருப்பவர்கள் விண்ணிப்பக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaingar Magalir Urimai Thogai | அரசு அளித்த வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) கோரி விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படுமா? என்பது குறித்த முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு மாதம்தோறும் கலைஞர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த திட்டத்தை இப்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகள் செயல்படுத்தி வருகின்றன.
கலைஞர் உரிமைத் தொகை பொறுத்தவரை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். தகுதி வாய்ந்த பெண்கள் இன்னும் இருக்கும் நிலையில் அது தொடர்பான கணக்கெடுப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யும்போது தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமைத் தொகை பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.
இதில் சிலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு வீடு பெற்றவர்கள் எல்லாம் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள் மட்டும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியாது.
அதேநேரத்தில் மிகப்பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்து, அதாவது தசை சிதைவு நோய், தண்டுவடம் மரபு நோய், தொழுநோய், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவிகளும் பயன்பெறத் தகுதியானவர்கள்.
அதேநேரத்தில் அரசு வீடு பெற்றவர்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியுமா? என்றால் பெற முடியும். அரசு நிர்ணயித்திருக்கும் தகுதிகளை பூர்த்தி செய்தவர்களாக இருப்பினும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அரசு வீடு பெற்றவர்கள் கலைஞர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கக்கூடாது என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
கலைஞர் உரிமைத்தொகை தகுதியை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இணையத்தில் கலைஞர் உரிமைத் தொகை என டைப் செய்தாலே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஓபனாகும். அதில் கலைஞர் உரிமைத் தொகை தொடர்பான அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அடிப்படையில், வருமானவரி செலுத்துபவர்களாக இருக்க கூடாது. சொந்தமாக கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கும் மேல் நன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. ஒருவேளை இந்த தகுதியின்மை இருந்தும் யாரேனும் கலைஞர் உரிமைத் தொகை பெற்றால் அதனை நிறுத்த அரசுக்கு முழு உரிமை உண்டு.
தகுதியில்லாத பயனாளிகள் குறித்து முழு விவரம் தெரிந்தால் கலைஞர் உரிமைத் தொகை இணைய பக்கத்தில் சென்று அந்த பயனாளியின் விவரம் குறித்து புகார் தெரிவிக்கலாம். அந்த புகார் அரசு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு உண்மை இருந்தால் தகுதியில்லாத பயனாளிகள் உடனடியாக நீக்கப்படுவார்கள். மாதம்தோறும் கலைஞர் உரிமைத் தொகை பயனாளிகளின் அடிப்படை தகவல்களை அரசு மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலைஞர் உரிமைத் தொகை வேண்டும் என நினைப்பவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் எந்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
நிராகரிக்கப்பட்ட காரணங்கள் ஏற்றுக் கொளும்படி இல்லை என்றால் விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் மேல்முறையீடு செய்தால் விண்ணப்பம் மீண்டும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. உங்களின் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் குறித்த தகவல்களை நீங்கள் ஆன்லைனிலேயே செக் செய்து கொள்ளலாம்.