புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றால் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் போக்குவரத்துக் காவலர்கள் இனிமேல் சலான் போட மாட்டார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய மோட்டார் வாகன விதிகளை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டது. 


எனவே, இனிமேல் ஓட்டுநர் உரிமம் (Driving licence), இ-சலான் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களின் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்ப போர்டல் (Information Technology Portal) மூலம் மேற்கொள்ளப்படும். இதைத்தவிர, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட்து, உரிமம் பெற தகுதியற்றவர் என்று ஓட்டுநர் உரிமம் அதிகாரி குறிப்பிடுவது போன்ற ஓட்டுநர் உரிமத்தின் விவரங்கள், தொடர்ந்து  போர்ட்டலில் பதிவேற்றப்படும்.


அதோடு, இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவை போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க உகந்ததாக இருக்கும்  செய்யும் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே, இனிமேல் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் வாகன ஓட்டுநர்களை போக்குவரத்துக் காவலர்கள் துன்புறுத்த மாட்டார்கள்.


சமீபத்தில் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் பல்வேறு திருத்தங்கள் செய்து, அது குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport & Highways (MoRTH)) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 


“மோட்டார் வாகன விதிகளை சரிவர அமல் செய்து கண்காணிப்பதற்காக 1.10.2020க்கு முன்னதாக வாகன ஆவணங்கள் மற்றும் ஈ-சலான்களை (E-Challans) பதிவேற்ற வேண்டும்.” என்று MoRTH அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.


இதையும் பார்க்கலாமே | நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்... 


புதிய மோட்டர் வாகன விதிகள்:


1. உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது டிஜிட்டல் முறையில் நடக்கும்.


2. ஓட்டுநர்கள், வாகன உரிமம், பதிவு சான்றிதழ், காப்பீட்டு ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயம் கிடையாது. ஏனெனில் இந்த தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும், அரசாங்க போர்டல் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.


3. Digi-locker அல்லது m-Parivahan என்ற அரசாங்க போர்ட்டலில் ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றப்படும். மொபைல் எண் மூலம் தகவல்களை சேமிக்க முடியும்.


4. Digi-locker போர்ட்டலில் E-challan வழங்கப்படும்.


5. licensing authorityயால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரங்கள் போர்ட்டலில் தொடர்ச்சியாக பதிவிடப்படும். இதன் மூலம் காலாவதியான அல்லது போலி ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு போக்கு காட்டமுடியாது.


இதையும் படிக்கலாமே | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR