50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு; 5% அகவிலைப்படி உயர்வு!!
மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் ஒரு கோடி குடும்பங்களை பயன் அடையும் என்று நம்பப்படுகிறது.
புதுடெல்லி: தீபாவளிக்கு முன்னர் மத்திய ஊழியர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்கிய மத்திய அரசாங்கம் அவர்களின் அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவின் மூலம், மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் ஊழியர்களுக்கு பலன் கிடைக்கும். இதனால் ஒரு கோடி குடும்பங்களை பயன் அடையும் என்று நம்பப்படுகிறது.
இது தவிர, மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலனை ஏற்படுத்தும். அகவிலைப்படி ஐந்து சதவீதம் அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூட்டுதல் சுமையாகும். இந்த ஒப்புதல் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் கிசான் நிதி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுவரை இந்த தொகை 6 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு ஆதார் உடனான தொடர்பு இல்லாததால், பல விவசாயிகளுக்கு தவணை பணம் கிடைக்கவில்லை. அதன் காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டிக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மில்லியன் கணக்கான விவசாயிகள் நிவாரணம் பெறுவது உறுதி.
விவசாயிகளுக்கு 3 தவணைகளாக இரண்டாயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக மத்திய அரசாங்கத்தின் சார்பாக 87000 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டது. இது நான்கரை கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகளின் பெயர்களை இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பப்படாததால், இந்த திட்டத்தை வங்காளத்திலும் டெல்லியிலும் செயல்படுத்த முடியவில்லை.