மும்பை அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை அந்தேரி மரோல் பகுதியில் உள்ள ‘காம்கார்’ என்றழைக்கப்படும் தொழிலாளர் நல மருத்துவமனையின் 4-வது மாடியில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 


மளமளவென பரவிய தீயின் காரணமாக ஏற்பட்ட புகையில் சிக்கி நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். 


விவரம் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவயிடதிற்கு விரைந்து வந்தனர். சுமார் 12 வாகனங்கள் தீயனைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோரை மீட்டனர். இவர்களில் பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். சிலர் புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.


மீட்கப்பட்ட அனைவரும் கூப்பர், செவன்ஹில்ஸ் உள்பட 5 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இவர்களில் 2 குழந்தைகள் உள்பட 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது!