என்ன கிரெடிட், டெபிட் கார்டுக்கு இன்னும் 4 வருடம் தானா?
வங்கிகள் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு விரைவில் குறைக்கப்பட்டு, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
வங்கிகள் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு விரைவில் குறைக்கப்பட்டு, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியது, மக்களின் மொபைல் மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும். இந்தியாவின் மக்கள் தொகையில் 72% பேர் 32 வயதுக்கு மேலே இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது.
அந்த வகையில் அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்பட்டு, வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் மொபைல் மூலமே நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.